சிக்கல்கள்
ஆத்மநாதன்..
ஆறுமுகம்..
இரண்டு பேருக்கும்..
இடையில் ..
இப்போது
பெரும் இடைவெளி..
கமலினி..
கற்பகம்..
இரண்டு பேருக்கும்
இடையில்
இப்போது
பெரும் இடைவெளி..
ஆறுமுகம் காதலித்த
கற்பகம்..ஆத்மநாதனையும்
ஆத்மநாதன் ஆசைப்பட்ட
கமலினி ஆறுமுகத்தையும்
பெரியோர்கள் ஆசியுடன்
திருமணம் செய்து கொண்ட பின்
இவர்களுக்குள் இப்படி ஒரு
இடைவெளி..
யார் யாரைக்
காதலித்தார்கள்
என்பது தெரிந்ததால்
வந்த
இடைவெளி!
இடியாப்ப சிக்கலில்
இடைவெளி
கொஞ்சம்தான்..
அதனால் சிக்கல் !
இங்கே அதிகம்..
அதனால் சிக்கல்!
.
பெரியோர்களே ..
சிக்கலில்லாமல்
அல்லது மேலும்
சிக்கல் வராமல்
பார்த்துக் கொள்ளுங்கள்..!
காதலே இல்லையென்றால்
எந்த சிக்கலும் இல்லையோ?