கவிதை
கண் விழித்து காணும் கனவு..!
இது கற்பனை ஊற்றின் வரவு..!
காவலில் வைக்கும் இதயத்தைக் கூட
களவாடிச் செல்லும் சொல்லின் வலிவு..!
காக்கையினை குரலில் குயிலாக்கும்,
கருங்குரங்கினை அழகில் மயிலாக்கும்,
பூனையினை உருவில் புலியாக்கும்,
புளுகனை பெயரில் புலவனாக்கும்,
செயற்கை பூச்செண்டிலும்
தேனெடுக்கும் தன் பொய்யில்..
கற்க, கற்க கலை அறிவு சுரக்கும்
கற்பவர் மெய்யில்,
கவிதை..!
எழத்துக்களை கோர்த்து
தொடுக்கும் சொல் மாலை..!
இது மணம் வீசாது
கவிஞனின் மனம் பேசும்..!