நந்தலாலா

தீக்குள் விரலை
வைத்தால் 'நந்தலாலா'

அறிந்த தெல்லாம்
தெளிந்த தில்லை...
தெளிந்த தெல்லாம்
அறிவ தில்லை...

உணர்ந்த தெல்லாம்
புரிந்த தில்லை...
புலர்ந்த தெல்லாம்
உணர்வ தில்லை...

முடிந்த தெல்லாம்
தொலை வதில்லை...
தெடர்வ தெல்லாம்
முடியாத தில்லை...

சூழ்வ தெல்லாம்
சொந்த மில்லை...
சொந்த மெல்லாம்
சுற்ற மில்லை...

சுடுவ தெல்லாம்
சுவைப்ப தில்லை...
சுவைப் தெல்லாம்
சுகித்த தில்லை...

ஆக்கல் அழித்தலில்லா
ஆனந்த மோனனிலை...
தீக்குள் விரலை வைத்தால்
திகழுமின்ப ஞானநிலை...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (5-Mar-15, 10:23 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 69

மேலே