இலையுதிர் காலம்

கண்டேன் அச்செம்பிழம்பு இலைகளை..

தூர தூர விசிறபட்டு,
தண்ணீருக்கு
நிதமும் தவித்து பீடித்திருந்தது....

காய்ந்த சருகினை,
மேற்படி வஞ்சனை செய்ய..
தரை புழுக்கமும்,
வான கதிர் முகமும்,
கரம் கோர்த்தன.

உயிர் மடிந்தும்,
வலி உணரும் விசித்திர பினமது..

புழுதி காற்று அதை தூர இறைத்தது...

என் இனமல்ல அது,
இருந்தும் என் உயிர் வாட கண்டேன்...

சுட்டெரிக்கும் சுடர் வெய்யிலும்...

கட்டு பிரிந்த திரள் காற்றும்,

தலையில் சூடு கொண்ட மண்ணும்...

தம் தம் கால்களால் ஓங்கி மிதிக்க,
உரமாய் மண்ணில் தைந்துதான் போனது...

அதன் முன் வாழ்வு எப்படி?

தளிராய் ததும்பியிருக்கும்..

முடம் இல்லா மூர்க்கத்தோடு,

இளம் பச்சை கொழுந்தாய்,

சீறி வரும் காற்றை செவில் பேற பல முறை அறைந்திருக்கும்..

பூக்களையும்,
ஈர குரல் குயில்களையும்,
பல முறை ஆர தலுவியிருக்கும்...

வெள்ளி மழை துளிகளை எல்லாம்,
ஆசை மடியும் வரை அணிந்து அவிழ்த்திருக்கும்....

உள்ளாசமாய் அசைந்ததின்று, சுரனை இழந்து,பினமாய் போனது..

ஆம் நைந்து போன அவ்விதல்கள்,
என்னையும் சில கனங்கள் பினமாக்கி போனது......

எழுதியவர் : சிவசங்கர்.சி (7-Mar-15, 7:59 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 396

மேலே