பெண்ணெனும் பெரும் புயல்

பெண்ணே நீ!

நிலமென்றால் மலையென்று கொள்
நீரென்றால் கடலென்று கொள்
காற்றென்றால் புயலென்று கொள்
நெருப்பென்றால் எரிமலையென்று கொள்
ஆகயமென்றால் அண்டவெளியென்று கொள்
பூவுக்குள்ளும் பூகம்பம் நிகழ்த்து

பெண்மை மென்மை வெறும் எதுகைமோனை
தாய்மை கருணை நம் குலப்பெருமை
வாய்மை வல்லமை தாய்ப் பாலூட்டி
ஒரு கற்புள்ள சமுதாயம் சமைத்திடு
பயங் கொள்ளலாமோ? பாரதிப் பெண்ணே!
செய முனதன்றோ? செருக்குறு பெண்ணே!

தன்சக்தி தானறியா அனுமன் போல்
உன்சக்தி உணராமல் இருந்திடல் தகுமோ?
பெண்சக்தி எதுவென்று புவனம் அறியும்
அதனாலே உன்பிறப்பை உலகம் தடுக்கும்
அப்பிழை களைந்து பிறப்பெடுப்பாய் பெண்ணினமே!

முட்டிமுட்டி முளைக்கும் விதையைப் போல்
தட்டித்தட்டி வடிக்கும் சிலையைப் போல்
கொட்டிக்கொட்டி கொடுக்கும் மழையைப் போல்
தொட்டுவிடும் தடைகளைத் தகர்த்துத் நிமிர்
தொடர்ந்து வரும் வெற்றி உன்னை!
பெண்ணெனும் பெரும்புயலே! மண்ணெனும் மாண்பே!

நீ வாழ்க!

எழுதியவர் : சிவகாமி அருணன் (8-Mar-15, 12:01 am)
பார்வை : 581

மேலே