வேகத்தின் விளைவு

வேகம் - விளைவு ..!

விரட்டி விரட்டிப் பிடித்தவன்
வீட்டையும் தாண்டிபோனான்
மின்னலெனும் வேகத்தில்
மேலோகம் இடம்கேட்டு..!

அசதியென்று போனவனோ
அமைதியென தூங்கிவிட
திசைமறந்து போனானோ
திரும்பிவரத் தெரியாமல்..!

கண்சிமிட்டும் நேரத்தில்
கண்சிமிட்டா துயரத்தை
காலமெலாம் கொடுத்துவிட
கண்டுபிடிக்கச் சென்றானோ..!

கருவறையில் சுமந்தவளை
கலையிழந்த உறவுகளை
முகவரிகள் கொடுக்காமல்
முகமறைத்துப் போனானோ..?

விதிமுறையை மதிக்காமல்
வீரம்காட்டி யென்னபயன்..?
முதுகெலும்பு உடைந்தபின்
முந்தானைக் கென்னபயன்..?

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (7-Mar-15, 10:17 pm)
பார்வை : 202

மேலே