என்ன தான் நடக்குது
ஒற்றை காலில் நின்று உணவு தேடுது கொக்கொன்று
இரண்டு காலில் நின்றுகொண்டு
குறி பார்க்கின்றான் வேடன் .
இருவிழி இழந்து இறைதேடுகிறாள்
அபலை பெண்
விலகிடும் முந்தானையில் விருந்துண்ண நினைக்கின்றான் கடைக்கண்ணில் கண்ணுள்ளவன் .
பிள்ளை வேண்டுமென மண்ணை உண்ணுகின்றாள் ஒரு தாய்
பெற்றது பாரமென குப்பையில் புதைக்கின்raal மற்றுமொரு நாய் (தாய்)
புகழை தேடி பணத்தை இறைக்கின்றான் செல்வந்தன்
புண்ணியம் கிடைக்கும் என்று புடி சோறு வேண்டுகின்றான் யாசகன் .
தவறென தெரிந்தும் மௌனித்து
நிற்கின்றான் நீதி தேவன்
தனித்தெனும் தடுப்பேன் சம்பாஷனை செய்யிது ஊமை .
அறிவியல் வளர்ச்சியில் ஆண்டவன்
படைப்புகள் அர்த்தம் அற்று போகையில்
அற்புதம் இங்கே அடிக்கடி நடக்குது
ஆமாம் ஆமாம் இப்போ
ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து
பிள்ளையும் பிறக்குது ..!!!!