இனிதாய் மகிழ்வாள் எங்கள் தாய் 2

இனிதாய் மகிழ்வாள் எங்கள் தாய் 2... தொடர்கிறது...

சாக்ரடீஸ் என்ற சான்றோரை இவ்வுலகம் மறந்திருக்காது. அவரின் கொள்கைகளை, அவர் நமக்கு வழங்கியதை, இவ்வுலகம் இன்றும் ஏற்று நடக்கிறது. அவரின் படைப்புகளை, கல்வியாளர்கள் பயின்று, ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

கணக்கில் ஒரு இராமானுஜர், வில் வித்தையில் ஒரு விஜயன், வான சாஸ்திரததிற்கு ஒரு ஆர்யபட்டா, போர்க் கலைக்கு ஒரு சாணக்கியன் என பலச் சான்றோர்கள் நம் பாரத நாட்டில் வாழ்ந்தனர். அவர்களின் திறமையினால் அவர்கள் சான்றோராக வெளிப்பட்டாலும், அவர்களை ஈன்ற அவரவரின் 'தாய்', எப்படி மகிழ்ச்சியோடு இருப்பாள் என்றால், அவர்களை (சான்றோர்களை) பாராட்டி மற்றவர்கள் பேசும்போது, இந்த மகிழ்ச்சி, அந்த 'தாய்' தான் தன குழந்தையை பெற்றப்போது ஏற்ப்பட்ட மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியை அவள் பெறுகிறாள். பேருவகை (பெரு மகிழ்ச்சி) கொள்கிறாள்.

தற்காலத்தே, கல்வியில் சிறந்தவர்களும், விளையாட்டில் சிறந்தவர்களும், ஆராய்ச்சியில் சிறந்தவர்களும், வியாபாரத்தில் சிறந்தவர்களும், கலை, இலக்கியம், மருத்தவம், பொறியியல் மற்றும் பலத் துறைகளிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம், நாம் எண்ணும்போது, நாமும் அவர்களைப்போல் சான்றோனாக இருக்கவேண்டும் எனும் அவா நம் மனதில் தோன்றுகிறது.

சான்றோன் எனப் பெயர்பெற்றிட, வயது வரம்பு ஏதுமில்லை. இருந்தாலும், இளைய சமுதாயம், பல நல்ல சான்றோரை நாடி, அவர்களன் படைப்பினை ஏற்று நடந்து, இவ்வுலகில் தன்னால் இயன்ற அளவு, நன்மைகளை செய்து, இவ்வுலகம், 'ஒரு தாயானவள்' பெரிதுவக்கும்படி செய்ய வேண்டும்.

இனி தாய், இனிதாய் மகிழ்வாள் நம்மை ஈன்ற நம் தாய்....

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (9-Mar-15, 12:09 am)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே