மழை பற்றிய சிறு குறிப்பு

மழை
பற்றிய சிறு குறிப்பு
`நனைதல்`
~~~

என் மேலும் விழுகிறது,
நானோ, தூரத்து ஆலங்கட்டிக்கு
ஓடுகிறேன்..
~~~

திறந்த ஜன்னல் வழியே மட்டும்
வருகிறது மண்வாசம்.
~~~

குடைக்கு வெளியே சாரல்..
உள்ளே அடைமழை..!
~~~

தண்ணீராக வந்து
துப்பட்டா குடையின் உள்ளே
காதலாக சொட்டுகிறது மழை..!
~~~

எழுதியவர் : புதிய கோடாங்கி (9-Mar-15, 6:24 pm)
பார்வை : 932

மேலே