கோட்டோவிய மழலைகள்1- கவிஜி

இரு புள்ளி
கண்கள்

மூன்றாம் புள்ளி
மூக்கு...

ஒரு கோடு
வாய்....

ஒரு வட்டம்
முகம்

இந்தப் பக்கம்
அந்தப் பக்கம்
ஒவ்வொரு கோடு
கைகள்

ஒரு கட்டம்
வயிறு

மீண்டும்
இரு கோடுகள்
கால்கள்

சுலபமல்ல
மனித படம்
வரையும்
குழந்தைக்கு.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Mar-15, 7:38 pm)
பார்வை : 211

மேலே