ஆசை ஆசை

உன் பாதத்தில் நான் எழுதும் கவிதையால் தான் நீ எழ வேண்டும்...

நீ குளித்த தண்ணீரின் வருகைக்கு நம் பூந்தோட்டம் காத்திருக்கும்...

உனக்கு உணவளிக்க என் ஐந்து விரல்களும் தவம் இருக்கும்...

உன் தலையை வருடி விட எனக்கு நீண்ட நாள் கனவு...

என் கண்ணுக்கு இடும் மையை எடுத்து உன் கன்னத்தில்
ஒரு புள்ளியாய் இட ஆசை

உன்னை யாரும் கண் போட்டு விட கூடாது என்று...

உனக்கு முன் வாசலில் சென்று கதவில்
நீ முட்டி விட கூடாது என்று
கை தாங்கி நிற்க ஆசை...


உன்னோடு இருசக்கர வாகனத்தில்
உன்னோடு பணிக்கு செல்லும் போது
கண்ணாடி வழியே உன் முகம் பார்க்க ஆசை...

அலுவலகம் வந்ததும் உன்னை கண்ணோடு கண் பார்த்து
ஒரு முறை வெட்கத்தோடு காதல் சொல்ல ஆசை...


பணி முடிந்ததும் உன் வருகைக்காக காத்திருக்க ஆசை...

மாலை வேலையில் உன் கை கோர்த்து கோவிலுக்கு செல்ல ஆசை...

ஏதேதோ சின்ன சின்ன தவறு செய்து
உன் அம்மாவிடம் திட்டு வாங்க ஆசை...

அதை உன்னிடம் மறைக்கவும் ஆசை...

இரவினில் நிலவை காட்டி உனக்கு சோறு ஊட்ட ஆசை...

ஏனோ தெரியவில்லை நம் குழந்தை உன் மேல உயிராய் இருக்க ஆசை...

என் மடியினில் உன்னை குழந்தையாய் உறங்க வைக்க ஆசை...

பின் ஒரு நாள் உன் மடியினிலே இறக்க ஆசை...

நீ வாங்கிக் கொடுக்கும் ஒரு முழம் பூவிற்கு உயிர் துறக்கவும் ஆசை..

(எப்பொழுது ஒரு பெண் தனது மாமியார் திட்டுவதை கணவனிடமும் கணவன் திட்டுவதை தன் தாயிடமும் மறைக்கிறாலோ அவள் தன் கணவனுக்கு நல்ல மனைவி ஆகிறாள்...)

(எப்பொழுது ஒரு பெண் யாரிடமும் திட்டு வாங்காமல் நடந்து கொள்கிறாளோ அவள் தன் கணவனுக்கு நல்ல குழந்தையாகவே மாறுகிறாள்...)

எழுதியவர் : மதுராதேவி... (9-Mar-15, 7:17 pm)
Tanglish : aasai aasai
பார்வை : 326

மேலே