அதிரடிச் சலுகை
கொஞ்சம் நில் பாரடி
என் கண்ணே
நானுடைவேன் நீர்க்குமிழ்
போலவே...
அதிகாலைச் சூரியன் நீ
செந்நிறமே.
நண்பகலே நின் பிரிவே
சுடுதே.
என்னுயிர் நீயே என்று
நான் எங்கும் உரைத்தேன்
இயற்கை சீற்றமும் தருதே
அதிரடிச் சலுகை எனக்கே.
--கனா காண்பவன்