குடும்பம்

அம்மா என்பதும் மூன்றெழுத்து அவள் தரும்
அன்பு என்பதும் மூன்றெழுத்து,
அப்பா என்பதும் மூன்றெழுத்து அவர் தரும்
அறிவு என்பதும் மூன்றெழுத்து,
தம்பி என்பதும் மூன்றெழுத்து அவனின்
பாசம் என்பதும் மூன்றெழுத்து,
தங்கை என்பதும் மூன்றெழுத்து அவள்உடன்
சண்டை என்பதும் மூன்றெழுத்து,
இதெல்லாம் உண்மை என்பதும் மூன்றெழுத்து,
இதில் வரும் நன்மை என்பதும் மூன்றெழுத்து.!!!

எழுதியவர் : கருப்பு.பூ (27-Apr-11, 8:07 am)
Tanglish : kudumbam
பார்வை : 419

மேலே