கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாடும் பொழுது
பார்வையாளர்களின் உற்சாகம்
மைதானத்தையே அதிர வைக்கும்
விளையாடும் வீரர்கள்
வெயில் வெப்பத்தையும்
பொருட்படுத்தாது மனமும் உடலும்
தொய்வின்றி விளையாட
பார்வையாளர்களின் ஊக்கமும் ஆரவாரமும்
வீரருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்
சக்தியாக மாறுகிறது

அதுவும் நாம் பிறந்த நாடு விளையாட்டில்
கலந்து விட்டால் சொல்லத் தேவை இல்லை
சந்தோசம் சத்தம் விசில் ஆட்டம் பாட்டம்
ஒரே கும்மாளம் தான்
நம் நாடு தோற்று விடக் கூடாது
என்ற ஆர்வம் ஆவல் ஆதங்கம்
நம்மை உந்தி தள்ளுகிறது

சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல் ஆகுமா
விட்டுக் கொடுப்போமா
விளையாட்டு வீரர்கள் திணற திணற
அடிக்க வேண்டும்
அவுட் ஆகாமல் ரன்ஸ் குவிக்க வேண்டும்
என்ன அவசரம் என்ன டென்சன் பார்வையாளருக்கு
தன் நாடு வெற்றி அடைய எத்தனை வேண்டுதல்
எத்தனை நேர்த்திக் கடன்கள்

இப்படி நம் நாட்டின் தேவைகள் ஒவ்வொன்றையும்
நம் மக்கள் கையில் எடுத்துக் கொண்டால்
நம் நாட்டில் எந்தத் தொல்லையும் இல்லையே
இதே ஆர்வம் நம் நாட்டின் எல்லாத் துறைகளிலும்
மக்களுக்கு இருந்து விட்டால்
உலகில் நம் நாடு மட்டுமே வல்லரசு
நம் நாட்டில் பஞ்சம் இல்லை பசி இல்லை
வறுமை அற்ற மிகப் பெரிய வளமுள்ள
நாடாக நம் நாடு உருவாகும் என்பதில்
எள்ளளவும் சந்தேகம் இல்லை
வாழ்த்துவோம் நம் நாட்டை
வளம் ஆக்குவோம் செழிப்புடனே

எழுதியவர் : பாத்திமா மலர் (10-Mar-15, 9:55 pm)
Tanglish : cricket
பார்வை : 78

மேலே