மடிய ஆசை

தினம் தினம் தன்
...............................சதை அறுத்தலால்
மனம் நொந்து மடியும்
..............................மரங்களோடு மடிய ஆசை.


கணம் கணம் வேற்று
...............................மொழி பேசி வயிறு
வளர்க்கும் எனக்கு
..............................என் தாய்மொழியோடு மடிய ஆசை.

இரத்தலை இழிவாய்
............................கொண்டிருந்த மக்கள்
இரத்தலை தொழிலாய்
...........................கொண்டதால் அப்பண்போடு மடிய ஆசை

இயற்கை சூழலை
...........................கண்டுரசித்த மக்கள்
அச்சுழலை கொன்று
.........................ரசிப்பதால் அச்சூழலோடு மடிய ஆசை.

வீரத்துடன் போரிட்ட
........................மன்னர்கள் வாழ்ந்த நாட்டில்
போரிட முடியாத எனக்கு
........................இன்றே மடிய ஆசை.

கவிநயத்துடன் சொல்லாடிய
.......................அவையை கண்களால் கூட
கண்டிராத எனக்கு
.......................இத்தருணமே மடிய ஆசை

இத்தனை மாற்றம் கண்ட நாட்டில்
எத்தனை நாட்கள் ஆனாலும் - அற்புத
தாய்மை மட்டும் மாறவில்லை
என் தாய் மடிமீது மடிய ஆசை.

எழுதியவர் : கிருஷ்ணா (10-Mar-15, 10:51 pm)
Tanglish : madiya aasai
பார்வை : 93

மேலே