இரவு
மாலை நேரம்
மெல்லிய காற்றில்
பனைமரத்து ஓலைகளும்
தென்னஞ்சிட்டுக்களும்
பாடல் பாடி ஆதவனை வழியனுப்பும்,
ஆதவனும் தன் இறுதிப் புன்னகையில்
உலகம் சிவக்கச் செய்து விடை பெறுவான்.
நிலவென்று ஒன்று தன் வேலையைச் செய்யும் என்று
நிலவுக்கு ஒளிகொடுத்து ஓய்வெடுப்பான்
வின்மீன்களும் மின்மினிகளும்
நிலவுக்கு உதவ வரும்.
அன்னார்ந்து பார்த்தால் ஆயிரம் பாடங்கள்
கற்றுக்கொள்ளத் தெரிந்துவிட்டால்
கவலை இல்லா வாழ்க்கை உண்டு