அந்த மலர்கள்
நாகரீகத்தின்
நச்சுக்காற்று படவில்லை..
வெளி வேடத்தின்
வெப்பம் தாக்கவில்லை..
இலக்கணங்கள்
இங்கு மீறப்படவில்லை..
இயற்கையில் செயற்கை
இன்னும் கலக்கவில்லை..
வெள்ளை உள்ளங்களைக்
கள்ளம் கறுப்பாக்கவில்லை..
அதனால்,
மண்மணம் மாறாத
பெண் கொடிகளில்
பூத்துக் குலுங்கும்
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பு மலர்கள்...!

