அன்புள்ள அப்பா 555

நெருக்கம்...
மலர் என்று சொல்லும்போது
இணையாத உதடுகள்...
பூ என்று சொன்னால்
இணையும்...
தந்தை என்று சொன்னால்
நெருக்கம் குறைவு இதழ்களுக்கு...
அப்பா என்று உச்சரித்தல்
நெருக்கம் பெருகும்...
பாசமும் அதிகரிக்கும்
உறவுக்குள்...
தந்தையின் சொல் மிக்க
மந்திரம் இல்லை...
அப்பாவின் சொல்லில்
தந்திரமும் இல்லை...
தோளில் சுமந்து முதன் முதலில்
உலகை கட்டிய உன் தந்தைக்கு...
நீ தோளில் சுமக்கும் வரை
வலிகளை கொடுத்துவிடதே...
அன்புள்ள அப்பா.....