கனவு தேவதை
ஜன்னல் வழி தவழ்ந்து
நாசி துளைத்தது
ஆயிரம் பூக்களின் நறுமணம்
அவள் வந்து போயிருக்க கூடும்...
*****
மூடிவைத்த என் கவிதை நோட்டு
படபடத்தது. ....
அந்த கருப்பொருளைதேடி
உரிப்பொருள் வந்திருக்க கூடும்
****
என் ஷோகேஸ் பொம்மை
செக்கச் சிவந்திருந்தது
தன்னை மிஞ்சிய அழகியை கண்ட
வெட்கமோ.... ?
******
கட்டவிழ்ந்த காளையின்
களைந்து கிடக்கும் உடமைகள்
நாணி கோணி கிடந்தது
மயில் அவள் அழகை ரசித்த
மையலோ....?
*****
எறும்புகள் திகைத்து
இதழோழரம் நகைத்து
எதையோ அசைப்போட்டு
ஓரிடத்தில் குழுமியதே
ஒரு 52 கிலோ
வெனிலா கேக் நடந்து வந்ததோ...?
*****
கொடியில் கிடந்த என் உள்ளாடைகள்
நத்தையாய் சுருண்டு
நகம் கடிக்கிறதே...
காற்று வழி வந்த தேவதையின்
கரம், புறம், சிரம் பட்டிருக்குமோ?
*****
நீரின்றி வதங்கி நின்ற
என் வீட்டு ரோஜாச் செடி
சிலிர்த்து செழித்து நிற்கிறதே
அவள் குவிந்த அதரத்தை
குறு குறுப்பாய் ரசித்திருக்குமோ?
*****
அவசரத்தில் அம்மா போடும்
அர்த்த பழசான கம்பி கோலம்
அழகாய் இருக்கிறதே
அந்த ரங்கோலி வந்து
அதை கடந்து போயிருக்குமோ?
*****
என் கனவு தேவதை
என் உறக்கத்தில் அன்றி
இன்று ஏன் வந்து போக வேண்டும்
நான் இல்லாத வேளையில் ......
*****