சாட்டையடி இரத்தம்
பேருந்து நிலையத்தில்
காத்திருக்கும்
வேளையில்
குருதியை
தானே வெளியேற்றும்
வேலை
அரங்கேறி கொண்டிருந்தது
**********************
அங்கங்கள்
ஒழுங்காய் அமைந்தும்
மனித பிறவியை
பங்கப்படுத்தி கொண்டிருந்தது
**********************
என் மனதில்
ரௌத்திரம்
படர்ந்து கொண்டிருந்தது
**********************
குருதியை சிந்தும்
வேளையில்
வியர்வையை சிந்தியிருந்தால்
நல்ல வாழ்வும் வந்திருக்கும்
பிறப்புக்கே அர்த்தம் தந்திருக்கும்
**********************
சாட்டை அடித்ததால்
மனது துடித்ததால்
சிலர் பணத்தை அளித்தே
உழப்பை அழித்தே
அவர்களை சோம்பேறிகளாக்கி கொண்டிருந்தனர்
*********************
இதுதான் இரக்கமோ
அவர்கள் வாழ்வுதான் சிறக்குமோ?
**********************
ஆதரவற்ற
முதியோருக்கு
அளித்திருந்தால்
அமைதியாய்
மனம் இருந்திருக்கும்
ஒன்றும் முடியாத
ஊனமுற்றோருக்கு அளித்திருந்தால்
உவகையாய்
மனம் இருந்திருக்கும்
********************
காரணமில்லாமல்
கேட்பவருக்கு
கரம் கொடுப்பதாய்
நினைத்து
பணம் கொடுத்து
அவர்கள் தலைமுறையையும்
அதுபோல் கேக்க
கெடுத்துவிட்டீர்கள்
வாழ்வை அதிலேயே
முடித்து விட்டீர்கள்
*******************
சாட்டைக்கு
பணம் அளிப்பதை
நிறுத்தி விடுங்கள்
உழைக்கும் எண்ணத்தை
சற்று கொடுத்து விடுங்கள்
**************************/*