அவளின் கடைசி ஆசை
குற்றுயிரும்
குலையுயிருமாக
ஆடையின்றி
தவழ்ந்தவளுக்கு
உள்ளங்கை துணியானது....
பீரிட்டு சிதறிய குருதி,
விரல்களின் இடைவெளியை
நொந்து கொண்டது....
ஒரு பக்க
மார்பு சதை
பியிந்து தொங்க
மறுபக்கத்தை
பந்தாடிக் கொண்டிருந்தவனின்
உறுப்பை
கடித்து கூலாக்கி துப்ப
வேண்டும் போலிருந்தது,
மரண நிகழ்வின் வாசலுக்கு......
நாறும் கழிவுகளை
நரம்புக்குள் படைத்த
மானுட பரிணாமம்,
புழுக்களால் புதையப் பட்ட
குழாய் துளைக்குள்
மசிரையா தேடுகிறது....
வெற்றுச் சதை, உடையும்
எலும்புக்குள்
முக்கி முக்கி நுழைய
தங்க மலையா
இருக்கிறது மடையன்களா,
குடல் தானே!
நீண்ட தோல் சுருங்க
கிறங்கி சாவும்
வக்கிர வேதம்
ஓதும் கூட்டச் சதியில்
சாவது கொடுமையடா...
உயிர் போன பின்னும்
உரசிக் கொண்டிருப்பவனை
அவன் தாய் காணும் காட்சியே
கடைசி ஆசை- கூட
இன்னொன்றும்...
எனை புதைக்குமிடத்தில்
ஆண் கல்லறைகள்
இல்லாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்....
கவிஜி