வாசிப்பை நேசிப்போம்

மொழிகளோடு
உறவு கொள்வோம்!
உதடுகளை அசைத்து
உலா வருவோம்!
உயிரெழுத்துக்களை...

*

இந்த உலகை
கண்களால் அளப்போம்!
கண்மணிகளே!
கண்களை நடக்கடியுங்கள்
வார்த்தைகளின் வழியில்...

*


குறிக்கோளை நெருங்க
சுற்ற வேண்டியது
புத்தகங்களை...

மன அமைதிக்கு
சிறப்பான தொழுகை
வாசிப்பு!

*


மாணவச் செல்வங்களே...!
அறிவுப்பசிக்கு சோறிடுவோம்

படிக்காதவர்களுக்கும்
ஆசையைத் தூண்டுவோம்!


தீண்டாமை
ஒரு பெருங்குற்றம்-நூல்களைத்
தீண்டாமலிருப்பது
மிகப்பெருங்குற்றம்!


*


வளரும் தலைமுறையே!
சரித்திரங்களைத் திருப்பி-சாதி
தரித்திரங்களைத் துடைத்து-புது
சரித்திரம் படைப்போம்!


*


எம்மொழியாயினும்
சுவாசிப்போம்!
அதைக்கற்க வேண்டின்
யாசிப்போம்!
பிறரை
யோசிக்க வைத்திட
பரவசமாய் வாசிப்போம்!


வாழ்நாள் முழுவதும் வாசிப்போம்!
அவ்வாசிப்பை நேசிப்போம்!

எழுதியவர் : திருமூர்த்தி.v (13-Mar-15, 7:45 pm)
பார்வை : 5098

மேலே