வறுமையின் நிறம் சிவப்பு

நாளுக்கு மூன்று வேளை உணவில்லை,
நாளைக்கு உணவுண்டா என்றும் தெரியவில்லை,
தாகம் கொண்டு அருந்தும் நீரும்,
தனிக் குவளையில் விற்பதானால்,
தவிர்த்திடும் காலம் வருமோ என்று,
தவித்திடும் தொண்டை இன்று.
கிடைக்காக் கல்வியால்
கிடைத்திடும் வேலை செய்து
கிட்டும் பணம் கொண்டு எங்கள்
அரைபிடி வயிற்றை
அடைக்க அயராது உழைத்திடும்
தந்தையால் கல்வி தருவதென்பது....

இயலாத ஒன்று.....

வயதனாலும் வறுமை கொண்டு
என் தந்தை சிவப்பு இரத்தம்
சுண்டிட உழைப்பதனால்தான் என்னவோ...
அன்றே கவிஞன் எழுதினான்....

"வறுமையின் நிறம் சிவப்பு"

எழுதியவர் : ramsundar (13-Mar-15, 9:14 pm)
பார்வை : 627

மேலே