அம்மா அம்மா

பத்து மாதம் கருவில் சுமந்த அன்னையே
பாதீயில் என்னை விட்டு பிரிந்தாயே...
நீயோ இன்று மரணம் என்ற படுக்கையில்!!!
இனி நானோ தனிமை என்ற வேலியில்...
பாலையும் தேனையும் பாசத்தோடு ஊட்டியவள் நீ...
இதற்கு நிகர் ஏதும் உண்டோ இந்த உலகில்!!!!
உந்தன் மறைவு எந்தன் குறைவு...
உந்தன் பிரிகை எந்தன் கவிதையாக மலர்கிறது முதல் முறையாக!!!
உன்னை மீண்டும் காண புழுபுழுவாய் துடிக்கிறேன்...
இதனையே கண்ணீராய் வடிக்கிறேன்...
இதுவே என் முதல் கவிதையாக சமர்பிக்கிறேன் உன்னிடம்
மீண்டும் ஒருமுறை உந்தன் கருவறை எந்தன் இருப்பிடமாக!!!
உந்தன் மடியில் தாலாட்டை கேட்க
வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை.