தாய்மைக்கு அருளட்டும்

தான்படைத்த உலகை..
தானே மறந்து
தாய்மடியில் தலைசாய்த்து..
உறங்கிவிட்டான் இறைவன்
கடவுளே!
சொர்க்கம் சென்றதால்..
கவலையில் மண்ணுலகம்
உறங்கியவன் எழுந்தால்..
தாயன்பு புரியட்டும்
தாயவளின் கண்ணீரைத்..
துளியின்றி துடைக்கட்டும்
குறையில்லாக் குழந்தைகளை..
தாய்மைக்கு அருளட்டும்

எழுதியவர் : moorthi (13-Mar-15, 8:14 pm)
பார்வை : 127

மேலே