இரண்டாவது நாள்
![](https://eluthu.com/images/loading.gif)
இரண்டாவது நாள் ........
--------------------------
ஓர் இறகு நான் வேகமாய்
அலைகிறேன்
ஓராயிரம் வானம் தெரிகிறது...
ஓர் நொடியும் என்
சுதந்திரத்தை இழக்கவில்லை
இருதயம் சிலிர்க்கிறது
மெல்லிய புன்னகையுடன்...
மெல்ல மெல்ல அத்தனை
வானங்களையும் தழுவ நினைக்கிறேன்.
இப்போது எனக்கு ஒரு இரண்டாம் நாள்
ஆரம்பமாகிறது
இப்போது நான் என் தாயின்
முந்தானைக்குள் முடியப்பட்டிருக்கிறேன்..