தொலைந்த காகிதம்

கைபேசி அணையும் வரை
கதைபேசி களித்திருந்தோம்
மலையுரசும் பனிக்காற்றை
மனதுக்குள்ளே மடித்து வைத்தோம்

பகல் இரவு பேதமின்றி கனவுகளாய்
காதலை சேகரித்தோம்

குடும்பத்தின் சுமை தாங்க
ஒட்டகமாய் மாறியதனால்
பாலைவன தேசத்திலே
வேலையும் தேடிவந்தேன்

கட்டிட வேலை செய்ய
தண்ணீருக்கு பதிலே
கண்ணீரை கலந்து வைத்தேன்

உலக கடல்களிலே செங்கடலில்
உப்பு அதிகம் எங்களின் கண்ணீர்தான்
இந்நிலைக்கு காரணமோ

உழைத்த பணத்தையெல்லாம்
தொலைபேசி தொலைக்குமென்று
பூக்களின் மொழிகற்று
மௌனியாய் வாழ்கிறேன்

விரைவில் என்தேசம் காண்பேன்
என்னவள் நேசம் காண்பேன்
எனும் நம்பிக்கையில்

எழுதியவர் : இணுவை லெனின் (14-Mar-15, 5:47 am)
பார்வை : 84

மேலே