பசுமையான பள்ளிப்பருவம்

..."" பசுமையான பள்ளிப்பருவம் ""..
படாம்பூச்சியாய் பரந்திருந்த
தட்டான் பிடித்திட்ட பருவம்
டி டா என்ற ஏகவசனகளால்
பாசமாய் அழைத்த காலமது,,,
சீருடையில் சிரிக்கும் பூவாய்
அவளும் நானும் ஒன்றாகவே
கைகள் கோர்த்து கதை பேசி
கள்ளமில்லா வெள்ளை மனம்,,,
ஆலமரத்தடி லோலாக்கு பாட்டி
ஓலைப்பொட்டி பெட்டிக்கடை
காக்காய் கடிகடித்த மிட்டாய்
கள்ளிச்செடியில் பெயரெழுதி ,,,
வேடிக்கையான விளையாட்டு
வாடிக்கையாய் நடந்துவரும்
காரணமில்லா சண்டையால்
கோபங்கள் அதிகமில்லை,,,
பாடங்களை மனனம் செய்து
மாறிமாறியே ஒப்புவித்தல்
தவறுகளுக்கு ஒன்றுவீதம்
மண்டையில் விழும் குட்டு
பாலி(னம்)யல் அறிந்திராத
அந்நாளின் அழகிய தருணம்
இந்நாளில் சாத்திய குறைவு
பசுமையான பள்ளிப்பருவம்,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...