மரணம் உதறிய உயிர் - இராஜ்குமார்
![](https://eluthu.com/images/loading.gif)
மரணம் உதறிய உயிர்
~~~~~~~~~~~~~~~~~
நிலவின் நிலவெளியில்
வெண்கற்கள் வீசிய வீதியில்
கூரிய முட்கள் கீறிய பாதமாய்
பாழடைந்த பளிங்கறைத் தேடி
ஊர்ந்து உலவியது என்னுருவம் ..
நாற்றிசையும் நானே நிற்க
நிழலும் நீரினுள் கருகியது ..
திக்கற்று திகைத்த விழிக்குள்
எரிப்பிழம்பின் வேகம் மீறிய
யாருமறியா பிம்பங்களின் பிரதி ..
முன்னோக்கி முடுக்கிய
முகமூடி தேகங்களின் கரங்கள்
உயிர் பிடுங்கும் விரல்கள் ..
உலர்ந்த உடலின் நிறங்கள்
காற்றின் கழுத்தாய் கர்ஜித்து
தேச இருளையே தேகமாக்கின ..
கட்டமிட்டு கவ்வும்
கரங்களை பிளந்துப் பிரித்து
பளிங்கறையின் பக்கவாட்டில்
படர்ந்துப் பரவியது என் பாதம் ..
உள்நுழைந்த முதல்நொடியில்
உதடு கிழிந்த உருவத்தின்
உயிர்ப்புலம்பல் மோதி மோதி
உடைந்து எரிந்தன
பளிங்கறையின் பாதாள சுவரும் ..
தற்கொலை தாழிட்ட தருணமாய்
பளிங்கு செதில் பாய்கையில் ..
இறுகித் திணறும் வலியோடு
பழிகளின் பாவனை
பழைய பக்கங்களைக் கிழித்து
பளிங்கில் முகம் காட்டியது ..
இருமுகமும் நானாகி இருள ..
இதயக் குழிக்குள்
துயில் துறந்த துடிப்பாய்
துருவம் குடித்த நெருப்பாய்
மரணம் உதறிய உயிரென
ஒவ்வொரு திசைகளிலும்
தனி தனி உடலாய் உலவினேன் ...
தாகம் தீராமல் ....
- இராஜ்குமார்