வளர்க்க மறந்தாலும் அழிக்க நினைக்காதே - உதயா

வாழும் காலங்களில்
மனித வாழ்நாள் வரை
வயிறினை நிறைய வைக்கிறாள்
வயிறில் சுமர்ந்திடா தாய்

தன் வாழ்நாள் முடிந்த பின்னும்
மடியில் சுமக்கும் தாயாகிறாள்
இன்பமாயினும் துன்பமாயினும்
சேயின் திணித்தலை வாங்கிக்கொள்கிறாள்

சேயின் வாழ்நாள் முடிந்த பின்னே
தாயாக தான் தூக்கிச் செல்கிறாள்
சேயினைப் பிரியா தாயாக
சேர்ந்தே தான் சாம்பலாகிறாள்

சேய்கள் வாழ்நாளில்
தாயினை அறிவதில்லை
அறிந்தாலும் தாயின்
அருமை புரிவதில்லை

தனக்கு உணடவிட்ட தாயின்
உதிரம் காண துடிக்கிறான்
கருவறையை அறுத்து விற்றே
காசு காண நினைக்கிறான்

பாலாய் கனியிட்ட மார்பகத்தை
மண்ணில்மேல் கிழித்து எறிகிறான்
மார்பின் துடிப்புகள் அடங்கியப்பின்
மண்ணோடு மண்ணாய் எரிக்கிறான்

மரத்தை மறந்த மனிதனே
உனக்கும் மரணம் வரும் மறவாதே
மரங்களை வளர்க்க மறந்தாலும்
அழிக்க மட்டும் நினைக்காதே

எழுதியவர் : udayakumar (14-Mar-15, 10:38 am)
பார்வை : 1998

மேலே