மறைந்தே இரு என் மலரே
![](https://eluthu.com/images/loading.gif)
உனை எங்கு மறைப்பேனடி...
விண்ணுக்குள் மறைத்தால்
விண் மேகங்களும்
மண் மழைத்துளிகளைக்
கண்ணீராக்கி நடிக்கும்...
மண்டைக்குள் மறைத்தால்
மூளையும் முகம் ரசிக்கும்...
கண்ணுக்குள் மறைத்தால்
கருவிழியும் கண் அடிக்கும்...
நெஞ்சுக்குள் மறைத்தால்
இதயமும் இதழ் கடிக்கும்...
மண்ணுக்குள் மறைத்தால்
மர வேர்களும்
மத போர்களைத் தொடுக்கும்...
இப்படி
உனை மறைக்கும் எண்ணம்
உள் மலரும் வண்ணம்
என் பாதம் முன்னும் பின்னும்
பயம் கொண்டு
பயணம் கொள்ளக் காரணம்..
உனை நான் மட்டும் நினைக்க
உடன் என் விரல் பேனா கவி வடிக்க
கலங்குகிறேன்..!!!!
என் உயிர் காதலை
என் விரல் கவிதைகள்
வென்று விடுமோ..?? என்று...
என் மனதிற்குள் மறைவாக
"மறைந்தே இரு என் மலரே"...
செ.மணி