நாளைய தலைமுறை
நாளைய தலைமுறை.......
உண்மையின் நகலாக பிரதிபளிப்பதை அடுத்த தலைமுறை என்கிறோம். தாத்தாவை பார்த்து அப்பாவும், அப்பாவை பார்த்து மகனும் இப்படி ஒருவரின் வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றிதான் அடுத்த தலைமுறை வழி நடந்து செல்கிறது.
தாத்தா செய்ய தெரியாததை அப்பாவும் அப்பா செய்ய நினைத்து நிறைவேறாததை மகனும் செய்வது வளர்ச்சிபாதையின் வெளிச்சத்தை காட்டுகிறது. தலைமுறைகளின் வளர்ச்சி இந்த தேசம் உலகபட்டியலில் முன்னேற்ற பாதையில் செல்வதை காண்கையில் மெய்சிலிர்க்கத்தான்வைக்கிறது புதிய தலைமுறைகளின் சிந்தனைகளும் செயல்களும்.
நேற்றய தலைமுறைகளை காட்டிலும் இன்றைய தலைமுறை வளர்ச்சி பாதையில் விதைகளை பதிந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. நேற்றய தேச சிந்தனைகளை காட்டிலும் பல விஷயங்களில் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் இளமை சாட்சிகளுடன் பல பின்னேற்ற பாதையிலும் சென்றுகொண்டிருக்கிறது என்பது மறுப்பதற்க்கில்லை.
நல்லவைகளை காட்டிலும் தீயவைகளை விரும்பி ஏற்க்கும் மனப்பக்குவத்திற்க்கு அடிமையாகிப்போன குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும். இன்றைய நிலையில் விருந்து உபசரிப்பு என்றாலே மது இல்லாமல் இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாய் ருசித்த மது பசிக்கு உன்ன உணவில்லா நிலையாய் அவன் குடும்பம் வீழ்ச்சியில் விழவைக்கிறது.
வீதியெங்கும் டாஸ்மார்க் கடைகள் அவன் பணம் கொடுத்து வாங்கும் மதுவில் வருமானம் தான் அரசுக்கு. வெறும் அவமானமும் வறுமையும் மின்சுவதுதென்னவோ அவன் குடும்பத்திற்க்கு. இந்த பழக்கத்தால் பல பெண்களின் வாழ்க்கை சீர்கெட்டு நிலைகுலைந்து நிற்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்பாவை பார்த்து நாளை பிள்ளையும் கெட்டுவிடக்கூடாது என்பதில் ஒரு தாயின் தவிப்பும் அவசொல்லும் சொல்லி மாலாது.
பொது இடங்களில் மட்டும் புகைபிடித்தலை தடைசெய்யும் சட்டம் அவனது வீட்டில் புகைபிடிக்க அனுமதிக்கிறது. அவனை பின்பற்றி வரும் நாளைய தூணாய் அவன் பிள்ளை தந்தையை நாயகனாய் பார்த்து வளர்ந்துவிட்டால் நாளை அவனும் புகைக்கு அடிமையாகி அழிவுப்பாதையில் செல்லமாட்டான் என்று என்ன நிச்சயம்.
இவைகளைகாட்டிலும் மீப்பெரும் கொடுமையாய் இன்று உலக அளவில் அரங்கேரிக்கொண்டிருக்கிறது பாலியல் வன்கொடுமை இந்த வார்த்தையை பேனா முனையால் பதியும்போதே இதயம் கலங்குகிறது.
எத்தனை சிறுமிகள் சீர்குலைந்து திசைதெரியாமல் வழிமாறிப்போயினரோ. தெரிந்தது எள்ளளவுதான் தெரியாமல் மறைக்கப்பட்டது மலையளவாயினும் வியப்பிற்க்கில்லை.
இன்று நாடு எதை நோக்கி பயணித்துகொண்டிருக்கிறது என்பதில் சிறு ஜயம்கூட எழுகிறது எனக்கு. மூன்று வயது பெண்மைக்குக்கூட பாதுகாப்பில்லை என்றால் காந்தி சொன்ன இரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாய் நடந்து செல்வது எப்படி சாத்தியம்.
எத்தனை தற்காப்பு கலைகளை கற்றாலும் ஏனோ இந்த பெண்களை காட்டிலும் ஆண்மையின் பலம் சற்று உயர்ந்தே இருக்கிறது உடல்வலிமையில். தன் மானம் காக்க கடைசி இதய துடிப்புள்ளவரையிலும் அவனுடன் போராடி வென்றவர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் மாண்டவர்கள் கண்க்கிலடங்கா எண்ணிக்கையில்.
எத்தனை தவறுகளை செய்தாலும் அவனுக்கு தண்டனைதர ஏனோ சட்டத்தில் அத்தனை ஓட்டைகள் வலுவிழந்த சிலசட்ட ஓட்டைகள் பண வலிமைகொண்டவனால் அடைக்கப்பட்டு கொண்டிருக்கிறது ஏட்டளவில் சட்டம் பேசும் வரை இவர்கள் பணத்தளவில் பேசிகொண்டுதானிருப்பார்கள்.
குடிகார கணவனிடம் கஷ்டபட்டு குடும்பம் நடத்தி சேர்த்து வைக்கும் சில ரூபாய்களை வைத்து வாங்கும் சில கிராம் நகையைக்கூட அணிந்துகொண்டு வீதியில் செல்ல முடியவில்லை ஊடகங்களில் முதலில் வரும் தலைப்பு செய்தியாய் நகை திருட்டு கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வலைவீச்சு.
எந்த ஒரு நாட்டிற்க்கும் முதல்படி கல்வி, கல்வி இன்று வியாபாரமாகிப்போனது. தரமான கல்விகள் இன்று எந்த ஏழைக்கும் இலவசமாய் கிடைப்பதில்லை. திறமைகள வளர்த்துகொள்ள தடைகளை இட்டு செல்கிறது கல்வி உலகில் இன்று பணம் என்னும் பேய்.
விலைவாசி உயர்வு குறைவான வருமானம் தாக்குபிடிக்கமுடியவில்லை குடும்ப செலவுகளை ஏன் இப்படி..? சிந்தித்துப்பாருங்கள் ஒரு நொடி எல்லாவற்றிற்க்கும் ஆதியாய் நிற்ப்பது மழை, மழையின்றி விளைச்சல் இல்லை விளைச்சல் இல்லாமல் உணவில்லை நேற்று 10 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 50 ரூபாய்க்கு விற்க்கிறது நாளை..? என்னவாகுமோ இருக்கும் மரங்களை வெட்டிவிட்டு கதவும் ஜன்னலுமாக மாற்றி குடிகொண்டோம் இருக்க வீடுகிடைத்துவிட்டது
அணிந்துகொள்ள உடை கிடைத்துவிட்டது ஆனால் உயிர்வாழ உணவுதான் விண்னைமுட்டும் விலைவாசியாய் உயர்ந்து நிற்க்கிறது.
நேற்றய தலைமுறை உணவிற்கு பஞ்சமில்லை பானை நிறைய தானியங்களை சேகரித்து தானும் நிறைவுடன் வாழ்ந்தான் அடுத்தவரையும் வாழவைத்தான்.
இன்றைய தலைமுறை உணவிற்க்காகவே பல கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு ஆரோகியமற்ற உணவை உண்டு பெயர் தெரியா பல வியாதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
சொல்லமுடியா சாடல்கள் இன்னும் எத்தனையோ குவியல்களாய் குவிந்துகிடக்கிறது.
நாயகனாகவும் நாயகியாகவும் நம்மை பார்த்து வளரும் நம் பிள்ளைகளை நல்வழியில் பயணிக்கவைப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமை. நல்லவைகளை சொல்லிகொடுத்து நல்லதொரு சமுதாயம் காக்க வழியாய் அடுத்த தலைமுறையை நல்ல தூண்களாக செதுக்குவோம். நேற்றய தலைமுறை நல்லவிதமாக உன் கையில் ஒப்படைத்த சமுதாயத்ததை இன்று பல ஓட்டைகள் நிறைந்த பாதுகாப்பில்லா பயணமான படகாய் மாற்றிவிட்டாய் சமுதாயத்தை அந்த ஓட்டைகளை அடைக்கும் வழிமுறை உனக்கு தெரிந்தால் கற்றுக்கொடு இல்லையேல் விட்டுவிலகிவிடு நாளைய தலைமுறையாவது அதை அடைத்து பயணிக்கட்டும்.
ரேவதி,வேலூர்....