மாமியார் மருமகள்

மாமியார் மருமகள்

* யாருமற்று வரும் மருமகளுக்கு
தாயாய் மாறிடுவாள்
பண்டங்கள் பல செய்து
பதமாய் பரிமாறிடுவாள்

* வாய்க்கு ருசியாய் உணவிட்டு
வாயாடியாய் மாற்றிடுவாள் (மருமகளை )
வேலை எல்லாம் தானே செய்வாள்
எசமானி மிடுக்குடன் வலம் வருவாள் (மாமியார் )

* சமைத்து சமைத்து களைத்திடுவாள்
செல்ல சண்டைகள் மூட்ட முற்படுவாள்
சீரியல் பார்த்து கற்றிடுவாள்
தன் குணத்தை எங்கோ தொலைத்திருப்பாள் (மாமியார்)

*புதிதாய் வந்த மருமகளோ
சிறிது சிறிதாய் புரிந்திடுவாள்
வாரத்தில் ஓர் நாள்
ஓரக்கண்ணில் கண்ணீர் காட்ட
பழகிடுவாள் ....

* வேலைகள் எதுவும் செய்ய வேண்டாம்
மாமியார் இடத்தை பிடிக்க வேண்டாம்
வாரத்தில் ஓர் நாள் ஓரக்கண்ணில்
கண்ணீர் காட்ட பழகிவிட்டாள்...

*மருமகளை குறை சொல்லி சொல்லி
தானே அனைத்தும் செய்திடுவாள்
எசமானியாய் வலம் வருவாள் ...

* மருமகள் சூட்சமம் அறிந்திட்டாள்
எசமானியாக ஆசைப்பட்டாள்
வேலை செய்ய தொடங்கிட்டால்
ஐயோ பாவம் என ஆனாள்...(மருமகள் )

* உட்கார்ந்த இடத்தில் ஏவுகின்றாள்
பண்டங்கள் செய்ய கட்டளையிட்டாள்
குறைகள் பல கண்டிட்டாள்-இப்போதும்
தானே எசமானி என பறைசாற்றிட்டாள்...(மாமியார் )

* முதியவர் சூட்சமம் புரிவதில்லை
அது புரியும் போது -மருமகள்
அந்நிலை எட்டியிருப்பாள்......


சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (17-Mar-15, 7:42 pm)
Tanglish : maamiyaar marumagal
பார்வை : 996

மேலே