யாழ்பானத்து அரசன்
பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழனின் குமுரல் இது
பவானிநதிக் கரையோரம்
கால் நனைந்தபடி அமர்ந்து கொண்டு அழகாய்த்தடவும் தென்றலிடம் உரைக்கிறேன்!
நாடிழந்து நாளாச்சு
காலம் கடந்தாச்சு
நடந்துவந்த பாதைபாதை
மறந்தாச்சு
நடந்ததின்னும் மறக்கலையே!
மதியிழந்தோர் சதியாலே
விதியிழந்து நின்றோமே!
உரிமை கேட்டோம் உறவை இழந்தோம்
உறவைக்கேட்டோம்
உயிரையே இழந்தோம்
நாடிழந்தோம் நதியிழந்தோம்
காடிழந்தோம் கடலிழந்தோம்
உண்ண உணவிழந்தோம்
உடையிழந்தோம்
என்ன சொல்ல அனைத்தையுமே இழந்தோமே!
யாழ்பானத்து ராசாவாய்
வாழ்ந்திருந்தேனொருகாலம்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை என் நிலம்தான் !
கதிரனவனும் காலை
எனைக்கேட்டுத்தான்
கை விரிப்பான்
பன்னை ஆட்களென்ன
பகுமான வாழ்க்கையென்ன!
யாழ்பானத்து ராசாநான்
வாழ்விழந்து விதியிழந்து
உறவிழந்து
உயிர்பிழைக்க ஓடிவந்தேன்
கடல்கடந்து!
கூலிக்கு மாரடித்து
அஞ்சுக்கும் பத்துக்கும்
அடுத்தவன் கை எதிர்பார்த்து
அரை வயிற்றுப்பசிதீர்க்கும்
அகதி நான் இன்று
அச்சனெங்கே?
அம்மையெங்கே?
அண்ணனெங்கே?
தம்பியெங்கே?
தங்கையெங்கே?
தேடித்தேடித்
தொலைந்தேன்
நான்
யாழ்பானத்து ராசா நான்
அண்ட வழியின்றி ஆண்டவனை வேண்டுகின்றேன் அனைத்தையும் தா என்று............