என்றும் வராது சண்டை கவிஞர் இரா இரவி

என்றும் வராது சண்டை ! கவிஞர் இரா .இரவி !


இரு தனி மனிதர்கள் சண்டை
இரு சாதிகளின் சண்டையாகுது !

இரு சாதிகளின் சண்டை
இரு தலைவர்கள் சிலை சிதைப்பானது !

இரு தலைவர்கள் சிலை சிதைப்பு
இரு ஊர்களின் சண்டையாகுது !

இரு ஊர்களின் சண்டை
இரு மாவட்டங்களின் சண்டையாகுது !

இரு மாவட்டங்களின் சண்டை
ஒரு மாநிலத்தின் சண்டையாகுது !

சாதி என்பதே சதி என்பதை உணர் !
சாதித்தலைவரின் சதியில் விழாதே !

மனிதனுக்கு அழகு பகுத்தறிவு
பகுத்தறிவைப் பயன்படுத்தினால்தான் மனிதன் !

பெரியார் சொன்ன பகுத்தறிவைப்
பயன்படுத்தினால் என்றும் வராது சண்டை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (17-Mar-15, 9:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 61

மேலே