ஜன்னல் கதவுகள்
கிழக்கிலிருந்து மேற்காய்
வலது புறமாய்
எல்லா வீடுகளையும் பார்த்தாயிற்று
மேற்கிலிருந்து கிழக்காய்
இடது புறமாய்
எல்லா வீடுகளையும் பார்த்தாயிற்று
ஒரு வீட்டின் ஜன்னல் கதவு கூட திறக்கப்படவில்லை
ஜன்னல்களின் கதவுகள் திறக்கபடுவதற்குதானே