ஒரு பார்வை பார்க்க வாருங்கள் -புதிய படைப்பாளி அறிமுகம்
தோழமை உள்ளங்களே ,
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோ என்று போவான் .......
பார்ப்பான் ஏய்க்கப் பார்ப்பான் ..............................இப்படி தன் படிப்பையும் தன் குலத்தையும் பகிரங்கமாக வசை பாடிய ஒரே கவி உலகில் இவன் ஒருவனே ...
காலா என்னருகில் வாடா ..சற்றே உன்னை மிதிக்கிறேன் ....என்றும் மரணம் கண்டு அஞ்சாதவன் .....
இந்த மீசைக்காரன்..... அவன் வழி வந்த பாரதிதாசனும் ...பாரதிதாசனின் வாரிசு மகாகவி ஈரோடு தமிழன்பன் .....இவர்கள் அனைவருக்கும் ஆசான் அய்யன் வள்ளுவன் ....என இந்த நால்வருடன் ஆன என் காதல் விவரிப்பு விளிம்புகளில் அடங்காது ... ஒரு பொழுதில் மலரவில்லை இந்தக்காதல் ....இதுப்போல காதலில் பலரும் ஈடுபட இத்தளம் வழி வகை சூத்திரங்களை நமக்கு வாரி அளித்துள்ளது ....சூத்திரங்களில் சில 'பல படைப்புகளை வாசித்தல் " 'உள் வாங்குதல் ''ஊக்குவித்தல் ' இவ்வகையில் தளத்தின் பலரும் இவைகளை 2012ல் இருந்து சய்து வருவது எனக்கு உவகையே ...
அன்றியும் பல படைப்புகளை வாசித்தல் என்பது மட்டும் சற்று நிறைவாக இல்லை என்பது ஏக்கமாய் உள்ளது படைப்பாளிகளுக்கு ...
இக்குறையை தவிர்க்க அவ்வப்போது நமது வாசிப்பில் மலரும் சில படைப்புகளை பதிய தளத்தாரிடம் ஒரு தனிப்பகுதி உருவாக்க முயலுவோம் ......மேலும் தோழர்கள் அபி , ராம் வசந்த், ஜின்னா , சரவணா , பழனிகுமார் , தேவா , ஆகியோர் பேசி ஒரு 'மகிழ்ச்சியான 'செய்தி விரைவில் உங்களோடு ......
இவ்வகையில் இன்று தளத்தில் 'பஞ்சை பறையன் பாரதி ' எனும் தலைப்பில் ஒரு படைப்பு வாசிக்க நேர்ந்தது .
எழுதியவர் இதுவரை 8 கவிதைகள் பதிந்துள்ளார் ...தோழர்கள் ஜின்னா , முகமது சர்பான் , ரினோஷா ,ஆகிய 3 பேர் மட்டுமே கருத்துரைத்துள்ளனர் ....இவர் 8 படைப்புகள் அளித்து 10 கருத்துக்கள் அளித்துள்ளார் . தலைப்புகள் எல்லாம் மிக வித்தியாச சொல்லமைப்புகளோடு ...கவிதைகளுள் மாறுபட்ட உருவக உடுப்புகளின் அலங்காரத்தோடும் படைத்துள்ளார் (பிழைகள் கூடுதல் என்பதைத்தவிர ..விரல்களின் பழக்கத்தில் தட்டச்சு இவருக்கு இலகுவாக கூடி வரும் எனும் நம்பிக்கை எனக்குள் ...!!!.)
மருந்துண்னா மந்திரவாதிகள் ........நிலாவெனும் குட்டிப் பயல் ....ஈரம் தகர்ந்த சிறகால் ........
ஈழ சிலுவைகள் ....ஆண்மையின் சூடு ........மரங் காக்கும் சிப்பாய்கள் .......வேஷம் மாற்றும் வெண்பாஷைக்காரன் ......உலகுக்கு வெண்சோறு சமைப்பவன் .......என்றெல்லாம் வார்த்தைகளில் வசீகரம் படைத்து காத்திருக்கிறார் நமது விழி வாசிப்புகளுக்கு ....
இவரின் ஒரு கவிதை இங்கே ....
ஈழம்....
கருவறைக்குள் முடிந்த விடியல்...
(பிண) பினகிடங்குகளின் பிரிய வசிப்பிடம்...
வாழ்ந்தவர்களின்,
வாழ நின்றவர்களின்,
தேய்பிறை தேசம்...
இங்கு முளைத்த பூக்கள் மட்டுமே
பூகம்ப சேற்றில் சிக்குள்ளும்... (சிக்கிக்கொள்ளும் ??)
சிவந்த சூரியனோ இங்கு
மட்டும் மங்கி (மங்கலாய் /மங்கியே )பிறக்கும்...
ஆம் ,
இது பல ஏசுமார்கள்
சிலுவை பட்ட தேசம்...
பகைமை வெறி பிடித்தமையால்
பாற்பட்ட (பாழ்பட்ட) தேசம்.....
இங்கு அரும்பிய பிஞ்சுகள்
தொட்டில் விளையாட்டில் திளைக்கவில்லை,
பாய்ச்சல் தோட்டாக்களில்
நெஞ்சம் துளைத்தன....
இளங்காளைகள்
காதல் விளையாட்டில் களித்திருக்கவில்லை,
மரணத்தால் கடிக்க பெற்று,
கத்தரிக்க பட்டனர்....
பட்ட மரங்களும்,
சிவப்பு கோர்த்த நதிகளும்,
(பிண )பினந்திண்ணி கழுகுகளின் ஏக ஏப்பமும்,
அலறல் சப்தங்களும்,
(பிண) பினவாடைகளும்,
காற்றின் சுவற்றில்
சித்திரங்களாய் எழும்பி இருந்தன...
தெருக்கள் நகர்ந்தன
வெறுமை என்னும் ஓடயாய்..(ஓடையாய் ??/ஓடாய் ??)
நாட்கள் பிறந்தன
முட்களின் கூர்மையாய்...
குண்டும்,புகையும் அந்த
குறிஞ்சி பூக்களின் குணம் கெடுத்தன....
(முனகி )முணகி ,அழுது
உயிர் உதிர்க்கும் தேசமய்யா அது....
இரண வடுக்களை
ஒருசேர ஆண்டு முடிக்கும்...
ஆசைகளை எறித்து, (எரித்து )
அகபேயை,
பயமாய் வளர்த்து,
அவல கீதங்களாய்
அங்கேயே சமாதி ஏறின...
இலட்சோப லட்சங்கள்,
இலட்சனை இழந்தன..
ஓடவும்,பதுங்கவுமே
இவர்கள் பாக்கியம் பெற்றார்கள் போலும்..
சோற்றுக்கும்,
மருந்துக்கும்,
அரக்கர் பலர் கூத்திற்கும்
இடையே இவர்கள்
உயிர் வாழ்வு நிச்சயிக்க பட்டதன்றோ...
பகைமை வேறருந்து,
மீத உயிர்கள்,
நல்வாழ்வுடன் உடன்பாடு படலாமோ?
வழியேதும் உண்டோ?
சொல்வீர் உலக சாதிகளே...
கடை தேசங்களே,
மனிதம் பேசும் மார்கங்களே.....சொல்வீர்..
மாதர்களும்,கிழவர்களும்,
வீர சேனைகளும்,
ஓரிரு இராவுகளிலெல்லாம்
சிவப்பு திராவகமாய் உருமாறிய
செய்தி கேட்டு பதில் சொல்வீர்...
ஈழ தாய் தம் பிஞ்சுகளை பிரசவிக்காமலே,
தம் உயிர் மூச்சை மறித்து கொண்டாள்...
இவளுக்கு அஞ்சலி செலுத்தியது தவிர்த்து,
வேறென்ன செய்வதாய்
உமக்கெல்லாம் உத்தேசம்...???.சொல்வீர்... .
அம்மாப்பேட்டை சங்கர் சிவகுமார் தான் அவர் ....வாசித்து வாழ்த்துங்கள் ...