தேனிதழ் பாக்கள்
பூக்களை மொய்த்திடும் தேனீஉன் பூவிதழில்
தேடுவது என்னதே னோ ?
பாக்கள் எழுதிடும் நானுமுன் பூவிதழில்
நாடுவது செந்தமிழ்த்தே னே
-------குறள் வெண்பாக்கள்
பூக்களை மொய்த்திடும் தேனீஉன் பூவிதழில்
தேடுவது என்னதே னோஎன் இனியவளே
பாக்கள் எழுதிடும் நானுமுன் பூவிதழில்
நாடுவது செந்தமிழ்த்தே னே
-----இன்னிசை வெண்பா
------கவின் சாரலன்
ஆர்வலர்கள் படிக்க கற்க எழுதுக