தமிழ் வாழ்க மாற்றிப் போற்றுக

தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க !
மாறவேண்டிய போற்றியிது
தமிழர் வாழாமல் -தனியே...
தமிழெங்கே வாழும்
உடலில்லா உயிரது..
உலகத்தில் வாழ்வதெங்கே ?
உடல் வளர்த்தே..
உயிர் உயிர்வளர்க்க..
திருமூலர் சொன்னபடி
தமிழரென்ற உடல்வளர்த்தே..
தமிழென்ற உயிர்வளர்ப்போம்..
வாழ்க தமிழ் இனிவேண்டாம் -தமிழ்
வாழ்விழந்த மொழியல்ல..
வளர்க தமிழதும் வேண்டாம்..
தமிழ் வளர்ந்துவிட்ட காரணத்தால்..
இனி..
போற்றிகளை மாற்றி..
தமிழை வாசிப்போம்
உயிராய்... உடலாய்..
உடல்கொண்ட உணர்வாய்..

(என்னுள் எழுந்த இந்தமாற்றுச் சிந்தனை தவறென்றால் மன்னிக்கவும்)
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (19-Mar-15, 1:46 pm)
பார்வை : 591

மேலே