கண்ணீர் கண்ணீர்
.."" கண்ணீர் கண்ணீர் ""...
காலம் நமக்கு தந்த அன்பளிப்பு
நம் பிறப்பின் ஆரவார மகிழ்ச்சி
கதைமுடிந்து இறப்பின் துக்கம்
இந்த கரிக்கும் கண்ணீர்த்துளி
என்றும் இரண்டுக்கும் பொதுவே,,,
ஏழையின் வீட்டிலும் அவரை
ஏளனம் செய்வோர் வீட்டிலும்
மனிதநேயம் இழந்தோருக்கும்
மனசாட்சி தொலைத்தொருக்கும்
உணர்ச்சியின் ஓரே வெளிப்பாடு,,,
அணு ஆயுதத்தின் சக்தியைவிட
ஆயிரமுறை பலம் வாய்ந்தது
கண்ணீரின் விலையரிந்தவர்
கருணையின் அரவைப்போடு
இரக்கமே நிறைந்திருப்பார்,,,
ஏழையின் அழையா விருந்தினர்
அழியாமலே ஆண்டுமுழுவதும்
நித்தம் கோரத்தாண்டவமாடும்
நித்திரையின் நிதர்சன எதிரி
கண்ணீர் கண்ணீர்த்துளியே ,,,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..