சொல்லாக் காதல்

மௌனங்கள் பேசிய மொழி
மனமெல்லாம் மத்தாப்பு பூரிப்பு
விழிகளின் வீர விளையாட்டு
விவரிக்கா ஊமைக் காதல்

காலத்துக்கு அதன் அவசரம்
வேடங்கள் மாற்றும் நிர்பந்தம்
நேற்றும் கேட்கிறாள் கனவில்
சொல்வீரா நும் காதலை !

எழுதியவர் : முரளி (18-Mar-15, 1:53 pm)
பார்வை : 125

மேலே