பழமொழி பிழைமொழி ஆனது

பழமொழி என்பது நம் முன்னோர்கள் நமக்காக எழுதி வைத்த அருமையான, அர்த்தம் நிறைத்த வார்த்தைகள் ஆகும்.
ஆனால் அதை நாம் சரியாக படிக்கின்றோமா, அல்லது எழுதுகிறோமா என்பதில் இருந்தே அதன் சரியான அர்த்தம் தெரியவரும்.
தற்போது நிறைய பழமொழிகளை நாம் பிழையாகத்தான் படித்து வருகிறோம், பிழையாகத்தான் பொருள் கொள்கிறோம்.
ஒரு சில பழமொழிகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளவோம்.

1. "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்னும் பழமொழி.

இருப்பது மண் குதிரை. அதை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா?
பிறகு எப்படி இந்த பழமொழி வரும்?
இந்த பழமொழியை இப்படி எழுதுவதே தவறு. அதன் உண்மையான வார்த்தைகள் என்னவெனில்.
"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதாகும்.
மண் குதிர் என்பது ஆற்று ஓரத்திலும் ஆற்றுக்கு உள்ளேயும் இருக்கும் மண் குவியலாகும். அது மிகவும் மென்மையானது. பார்பதற்கு அதன்மீது கால் வைத்து செல்வதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்க தோன்றும். ஆனால் கால் வைத்ததும் அப்படியே உள்ளே போய்விடும். அதனால்தான் மண் குதிரை நம்பி கால் வைக்காதே என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்தனர்.

நாம் மண் குதிர் என்பதை குதிரை என்று மாற்றி எழுதுகிறோம். படிக்கிறோம். ஒரு எழுத்து மிகை ஆனதால் அதன் அர்த்தமே மாறி விட்டது.

இப்படித்தான் பல பழமொழிகள் உள்ளது. அடுத்து. அடுத்த கட்டுரையல்

நன்றி.

எழுதியவர் : sujatha (19-Mar-15, 1:55 pm)
சேர்த்தது : கலைமணி
பார்வை : 242

சிறந்த கட்டுரைகள்

மேலே