கடனை கட்டிப்பார் வீடும் கனவாகும் - பூவிதழ்

இங்கு வீட்டின் சுவர்
வெறும் மணலும் சிமெண்ட்டும்
கலந்து கட்டபடுவதில்லை
கடனும் வட்டியும்
சேர்த்தே கட்டப்படுகிறது !
என் கனவு இல்லத்தில்
இப்போதெல்லாம்
கனவுகள் வருவதேயில்லை
உறக்கம் விற்றுத்தான்
தலையணை வாங்குகிறோம் !
என் முன்னோர்கள்
வாழ்வதற்காக வீடு கட்டினார்கள்
நான் வீடுகட்டுவதர்க்காகவே
வாழவேண்டியுள்ளது
கடனை கட்டிப்பார் ! வீடும் கனவாகும் !