கடவுள் வாழும் ஆலயம்

பசியின் கொடுமை அறிந்து
போக்குபவன் இறைவன் ஆகின்றான்!
படைத்த உயிர்களுக்கெல்லாம்
பகிர்ந்தே உணவை படைத்தான்!
இருப்பவன் அதை
தனது ஆக்கிக் கொண்டான்!
சாமர்த்தியம் இருப்பவன்
பதுக்கியும் வைத்தான்!
சாதுர்யம் இருப்பவன்
சேர்த்தும் வைத்தான்!
ஆனால்
ஒன்றும் இல்லாதவன்
ஓட்டாண்டியாகவே வாழ்கிறான்!
உனக்கு மிஞ்சிய
ஒருவேளை உணவும்
உனக்குச் சொந்தமில்லை!
அளவுக்கு அதிகமாக
சேர்த்திருக்கும் எதுவும்
உன் உடைமை இல்லை!
இருக்கும் வரை
இல்லாதவர்கள் வாழ
இயலாதவர்கள் உண்ண
இயன்றவரை உதவிடு!
கருணை வாழும் இதயங்கள்
கடவுள் வாழும் ஆலயங்கள்!
கோடி கோடியாய் கொட்டி நீ
கோவில் கட்டினாலும் அதில்
குடியேறாத இறைவன்
கையால் ஒருபிடி சோறிட்டு
ஒரு வயிற்றை நிரப்பு - உன்
உள்ளத்தில் உறைந்திடுவான்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Mar-15, 7:34 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 57

மேலே