ஏன்

நீரில் விழுந்தேன்; நீந்தி வந்தேன்;
நேரில் உன்னைக் காணவே...

காதலில் விழுந்தேன்; கனவில் வந்தேன்;
காதலி உன்னைக் காணவே...

நெருப்பில் குளித்தேன்; நேற்று விழித்தேன்;
நெஞ்சில் உன்னைச் சுமக்கவே...

தனிமை உணர்ந்தேன்; தவிப்பில் இருந்தேன்;
தலைவி உன்னைப் பிரியவே...

சுவாசம் இழந்தேன்; உன்சுவாசம் அறிந்தேன்;
உன்னில் நானும் வசிக்கவே...

நிழலை இரசித்தேன்; நிஜத்தில் நடித்தேன்;
நீயும் என்னைப் பார்க்கவே...

எதிரில் இருந்தேன்; எடுத்து வந்தேன்;
என்னை உன்னில் சேர்க்கவே...

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (20-Mar-15, 12:18 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : aen
பார்வை : 75

மேலே