மூன்றாம் பால்

அதிகாலை.
ஈரக்காற்று இருவரிடமும்
அனுமதி கேட்காமல் வாட்டியது.
ஏதோரு கனவால் விழிதிறக்க!!
தூக்கம் என்னை விடுத்து
அயராமல் புரளுது
போர்வையில்.

குளிருக்குள் புதைகையில் திணறி
விழித்தால் அவளும்;
நுனிசாமத்தில் பெய்த மழையின்
மண்வாசம் சற்று
காற்றோடு உணர முடிந்தது.

யாதும் பேசா அரிவை
காதருகே வந்து நெற்றிச்
சுருக்கி கண்ணை
உயர்த்தி
என்ன வென்று சாடைகாட்ட,
இல்லையென தலையசத்து
புன்னகை புகுகையில்
போர்வையில் தலைபுதைத்து கொண்டேன்.

அவளும்
புதைந்துகொண்டாள்.

போர்வைக்குள் வந்த நிலவிடம்,
அயர்ந்து விழித்ததேன் என
வினவ
ஏதோரு
கனவென அதையே
சொன்னால்!!!

காதல் சுடர் விட்டு எரிய
கனவெதற்க்கு?
காரணமெதற்கு?
குளிரனைக்க
ஒருவருக்கொருவர் விறகானோம்!!!

ஈரக்காட்டிலே மறுபடிபெய்த மழைக்கு
ஒதுங்கிய வளாய் என் மார்பில்
உறங்கி கிடந்தாள்.

விடிகையில்
வள்ளுவனின் மூன்றாம் பாலில்
ஒரு சில குறள்களை
இருவரும் கடந்திருந்தோம்...

எழுதியவர் : சுந்தர பாண்டி (20-Mar-15, 12:41 pm)
Tanglish : moonraam paal
பார்வை : 2264

மேலே