நம்பிக்கை
அவனியிலே பவனி வந்து
மனசெல்லாம் தனை நிறுத்தி
வேண்டுகின்ற வரங்கள் எல்லாம்
கேட்டறிந்து மனதில் கொண்டு
யாருக்கு எது தோது யோசித்து
அவரவர்க்கு அருள் வரங்கள்
அள்ளித் தரும் ஆண்டவனில்
நம்பிக்கை வைத்து விட்டால்
நலம் யாவும் நாம் காண்போம்
நலம் யாவும் பெற்று நலமுடனே
நாம் வாழும் நல வாழ்வை
கண்டுணர்வான் தன் உணர்வில்
ஓடும் வரை ஓட விட்டு
ஓரத்தின் விளிம்பில் கை கொடுத்துக்
காத்திடுவான் அன்புள்ள தெய்வம் அவன்
கண் காண முடியாத காற்றாகி அவன் இருப்பான்
காவலுக்கும் துணை நிற்பான்
தீமைதனை அண்டாது திடன் சொல்லி
காத்து இருப்பான்
நன்மைதனை நம்பக்கம் நாடி வர செய்திடுவான்
சோர்வெல்லாம் போக்கிடுவான்
சொக்க வைக்கும் தையிரியத்தால்
அவன் மீது அசையாத உறுதியான
விசுவாசம் கொண்டுவிட்டால்
பேசிடுவோம் அவன் புகழை
எந்நாளும் எப்போதும் எங்கெங்கும்
கண்டிடுவோம் அவன் செயலை
கொண்டாடுவோம் அவன் புகழை
அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது என்று உணர்வோம்