உழைப்பின் முதல் ஊதியம்

..."" உழைப்பின் முதல் ஊதியம்""...

கொளுத்துகின்ற வெயில்
கொதிக்கின்ற சாலைகள்
அடி எடுத்துவைக்க முடியாமல்
குடிக்க சொட்டுதண்ணி
இல்லாமல் வியர்வையில்
தேகமெல்லாம் குளிக்கிறேன்
உழைத்துனான் ஊதியம்
பெருமுன்னே வழிந்தோடி
கரிக்கும் குருதியாய்
என்னுடல் வெளியேற்றும்
உன்னத அடையாளம்
வியர்வையின் நறுமணம்
வியர்வைத்துளியில்ல
எந்தவொரு உணவுமில்லை
வசதிகள் படைத்தோருக்கு
இதுயென்றும் துருனாற்றம்
உழைக்கும் எங்களுக்கு
வியர்வையே சந்தனம்,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (21-Mar-15, 1:55 pm)
பார்வை : 510

மேலே