மாற்றம்

வனங்களை அழித்தோம்
வன நாள் கிடைத்தது...

சின்னஞ்சிறு குருவிகளை அழித்தோம்
சிட்டு குருவிகள் தினம் கிடைத்தது.....

மணலை சுரண்டி கட்டாந்தரையாக்கினோம்
தண்ணீர் தினம் கிடைத்தது....

இப்படி இயற்கை படைப்பை அழித்து
தினங்களை மட்டும் பெயர்சூட்டி பார்கும்
அறிவாளிகள் இந்த தலைமுறையாக மட்டும்தான் இருக்கும்...

அடுத்த தினத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம்
உலக கருப்பு (கற்பழிப்பு) தினம்...
உலக ஊழல் தினம்...

தலைப்பிற்கேற்ற தலைமுறையாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.....
வலிக்கிறது இந்த தலைமுறையில் பிறந்ததற்காக அல்ல
மாற்றம் விரும்பா சமூகதில் இருக்கிறோம் என்பதற்காக....

ரேவதி....

எழுதியவர் : ரேவதி (21-Mar-15, 12:51 pm)
Tanglish : maatram
பார்வை : 97

மேலே