ஹைக்கூ
பல முறை பழகியதால்
என்னை பிரிய மனமில்லை
தோல்வி!
**************************
நேற்று மற்றவர் கைகளில்
இன்று குப்பை பைகளில்
செய்தித்தாள்
**************************
இறக்கைகள் இல்லை
பல பக்கமும் பறக்கிறது
மனது
***************************
பிச்சைக்காரனும்
பிச்சை போட்டான்
அரசு அலுவலகத்தில்!
*************************
ஒரு வேலையும் இல்லை
ஒரு வேளையும் இல்லை
உணவு!